பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆனது, உயர்கல்வியில் பெரும் சமத்துவத்தினை மேம்படுத்துவதற்காகப் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய சில முயற்சிகள், சம வாய்ப்பு மையங்கள், சமத்துவக் குழுக்களில் பெண்கள் மற்றும் SC/ST சமூகங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பாகுபாடு காட்டப்படும் சூழல்களில் மிகவும் விரைவான எதிர் நடவடிக்கை ஆகியவை அடங்கும்.
வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிலையில் சில கடுமையான தண்டனைகளையும், மேலும் சில சூழல்களில் அங்கீகாரத்தினை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழி காட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு நிறுவனத்தின் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு சமத்துவக் குழுவானது, மத்திய அரசின் செயல்பாடுகளை நிர்வகிப்பதோடு, பாகுபாடு குறித்த புகார்களை விசாரித்து நிவர்த்தி செய்யும்.
இக்குழுவில் குறைந்தபட்சம் SC மற்றும் ST பிரிவுகளைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும்.