UIP திட்டத்தில் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி
December 22 , 2024 8 hrs 0 min 35 0
தமிழகத்தில் தற்போது ஒரு மாதத்தில் குறைந்தது 150 பொன்னுக்கு வீங்கி நோய்கள் பதிவாகியுள்ளன.
2021-22 ஆம் ஆண்டில் 61 பாதிப்புகளும், 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 129 பாதிப்புகளும் பதிவாகியிருந்தன என்பதோடு 2023-24 ஆம் ஆண்டில் இந்த நோயின் பாதிப்பு 1,091 ஆக உயர்ந்தது.
சுமார் 40% பாதிப்புகள் ஆறு முதல் ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் இந்த பாதிப்பு விகிதம் 33% ஆக இருந்தது.
பொது நோய்த் தடுப்பு மருந்து வழங்கீட்டுத் திட்டத்தின் (UIP) கீழ் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரியது.
தமிழ்நாட்டில் UIP திட்டத்தின் கீழ், தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய 12 நோய்களுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 11 தடுப்பூசிகள் வழங்கப் படுகின்றன.
தட்டம்மை-ரூபெல்லா (MR) தடுப்பூசியானது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் UIP திட்டத்தில் சேர்க்கப் பட்டது.