TNPSC Thervupettagam

UIP திட்டத்தில் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி

December 22 , 2024 8 hrs 0 min 22 0
  • தமிழகத்தில் தற்போது ஒரு மாதத்தில் குறைந்தது 150 பொன்னுக்கு வீங்கி நோய்கள் பதிவாகியுள்ளன.
  • 2021-22 ஆம் ஆண்டில் 61 பாதிப்புகளும், 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 129 பாதிப்புகளும் பதிவாகியிருந்தன என்பதோடு 2023-24 ஆம் ஆண்டில் இந்த நோயின் பாதிப்பு 1,091 ஆக உயர்ந்தது.
  • சுமார் 40% பாதிப்புகள் ஆறு முதல் ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் இந்த பாதிப்பு விகிதம் 33% ஆக இருந்தது.
  • பொது நோய்த் தடுப்பு மருந்து வழங்கீட்டுத் திட்டத்தின் (UIP) கீழ் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரியது.
  • தமிழ்நாட்டில் UIP திட்டத்தின் கீழ், தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய 12 நோய்களுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 11 தடுப்பூசிகள் வழங்கப் படுகின்றன.
  • தட்டம்மை-ரூபெல்லா (MR) தடுப்பூசியானது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் UIP திட்டத்தில் சேர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்