சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (MSME - Micro, Small and Medium Enterprises) குறித்து ஆராய்வதற்காக 8 உறுப்பினர்கள் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
இது இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI - Securities and Exchange Board of India) தலைவரான UK சின்ஹாவால் தலைமை தாங்கப்படுகின்றது.
இக்குழு MSME துறையில் போதுமான மற்றும் குறித்த காலத்திற்குள் அளிக்கப்படுகின்ற நிதியைப் பாதிக்கும் காரணிகள் குறித்து ஆராய்கின்றது.
இது MSME துறைக்கு ரூ. 5,000 கோடி நிதியை அளிக்கப் பரிந்துரைத்துள்ளது.