இந்திய நொடித்தல் மற்றும் திவால் நிலை வாரியம் (The Insolvency and Bankruptcy Board of India - IBBI) ஆனது செபியின் முன்னாள் தலைவரான UK சின்ஹாவின் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளது.
இந்த பணிக்குழுவானது (7 உறுப்பினர்கள், 4 அழைப்பாளர்கள்) நிறுவன குழுமங்கள் நொடித்து போதல் குறித்த கருத்துகளை ஆய்வதோடு பொருத்தமான கட்டமைப்புகளையும் பரிந்துரை செய்யும்.
தற்போது உள்ள திவால் மற்றும் நொடித்து போதல் விதிமுறையானது (IBC) தனிப்பட்ட நிறுவனங்களுக்கு கலைப்பு அல்லது பணம் செலுத்துதலை வழங்கும்.
எனவே இது NCLT யின் (National Company Law Tribunal) அதிகார வரம்புகளில் பல நிறுவனங்களைக் கொண்ட பெரு நிறுவனக்குழுமங்களின் மொத்த சொத்துக்களின் மீதான தீர்மானம் அல்லது கலைப்புக்காக நொடித்தல் மற்றும் திவால் விதிமுறைகளுக்குள்ளாக ஒரு கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.