TNPSC Thervupettagam

UK-ன் புதிய உடலுறுப்பு தான திட்டம்

August 7 , 2018 2206 days 665 0
  • நாட்டில் உள்ள இந்திய வழித் தோன்றல் சமூகத்தின் அவசர உடலுறுப்பு தேவையினை பூர்த்தி செய்வதற்காக உடலுறுப்பு மற்றும் திசு தானத்திற்கான சட்டத்தினை மாற்றுவதற்கான புதிய திட்டங்களை ஐக்கிய இராஜ்ஜியம் (United Kingdom - UK) அறிவித்துள்ளது.
  • ஏற்கனவே உள்ள சட்டத்தில் செய்யப்பட உள்ள இந்த திருத்தமானது, உடலுறுப்பு மற்றும் திசு தானத்திற்கான இசைவின் புதிய முறையினை முன்மொழிகிறது.
  • இதயமாற்று சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்ட 10 வயது சிறுவன் மாக்ஸ் ஜான்சனின் நினைவாக இச்சட்டம் மாக்ஸின் சட்டம் என்றறியப்படுகிறது.
  • தங்களின் பிரியமானவர்களின் இறப்பிற்கு பிறகு உறுப்பு தானம் செய்வதற்கு குடும்பத்தார்களின் முடிவு ஒரு விருப்ப உரிமை என்பது போன்ற, இந்தியாவில் உள்ள முறையை ஒத்தவாறு இச்சட்டத்தில் இணைக்க இந்த மாற்றங்கள் முயற்சி செய்யும்.
  • இதன் கீழ், தனது உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பாதவர்கள் தேசிய சுகாதார சேவையின் (National Health Service - NHS) உடலுறுப்பு தானம் செய்பவர்கள் பதிவேட்டில் (Organ Donor Register - ODR) அவர்களின் முடிவை பதிவு செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்