நாட்டில் உள்ள இந்திய வழித் தோன்றல் சமூகத்தின் அவசர உடலுறுப்பு தேவையினை பூர்த்தி செய்வதற்காக உடலுறுப்பு மற்றும் திசு தானத்திற்கான சட்டத்தினை மாற்றுவதற்கான புதிய திட்டங்களை ஐக்கிய இராஜ்ஜியம் (United Kingdom - UK) அறிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டத்தில் செய்யப்பட உள்ள இந்த திருத்தமானது, உடலுறுப்பு மற்றும் திசு தானத்திற்கான இசைவின் புதிய முறையினை முன்மொழிகிறது.
இதயமாற்று சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்ட 10 வயது சிறுவன் மாக்ஸ் ஜான்சனின் நினைவாக இச்சட்டம் மாக்ஸின் சட்டம் என்றறியப்படுகிறது.
தங்களின் பிரியமானவர்களின் இறப்பிற்கு பிறகு உறுப்பு தானம் செய்வதற்கு குடும்பத்தார்களின் முடிவு ஒரு விருப்ப உரிமை என்பது போன்ற, இந்தியாவில் உள்ள முறையை ஒத்தவாறு இச்சட்டத்தில் இணைக்க இந்த மாற்றங்கள் முயற்சி செய்யும்.
இதன் கீழ், தனது உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பாதவர்கள் தேசிய சுகாதார சேவையின் (National Health Service - NHS) உடலுறுப்பு தானம் செய்பவர்கள் பதிவேட்டில் (Organ Donor Register - ODR) அவர்களின் முடிவை பதிவு செய்ய முடியும்.