நாட்டின் ஆய்வுத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய விசா ஒன்றினை தொடங்கி இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியவருக்கான வழியை UK (United Kingdom - ஐக்கியப் பேரரசு) திறந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து UK-க்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வரும் ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்களுக்கு புதிய UKRI அறிவியல், ஆய்வு மற்றும் கல்வித்துறை திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் UK-ன் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிப்புத் துறையினால் (UK Resarch and Innovation - UKRI) செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5-வது அடுக்கு விசா வழியுடன் (தற்காலிக வேலையாட்கள் அரசு - அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்றம்) சேர்க்கப்பட்டுள்ளது.