அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) அமைப்பானது, இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பானது, 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற அயலவர்களுக்கு (வெளி மாநிலத்தவர்) எதிரான இயக்கத்தின் போது தொடங்கப் பட்டது.
“அசாம் மாநிலத்தில் உள்ள அயலவர்களின் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்காக” 1985 ஆம் ஆண்டில் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1990 ஆம் ஆண்டில், மத்திய அரசானது பஜ்ரங் நடவடிக்கையினைத் தொடங்கி அதன் மூலம் 1,221 ULFA கிளர்ச்சியாளர்களைக் கைது செய்ய வழி வகுத்தது.
அசாம் ‘அமைதியற்றப் பகுதி’ என அறிவிக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) செயல்படுத்தப் பட்டது.
1992 ஆம் ஆண்டில், பின்னர் சரணடைந்த ULFA (SULFA) எனப் பெயரிடப்பட்ட ஒரு பிரிவினர், சரணடைவதற்கும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் முன் வந்தனர்.
அரபிந்தா ராஜ்கோவா போன்ற சில ULFA பிரிவினர், ராஜ்கோவா தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு உட்படும் ULFA சார்பு பிரிவு என்று அழைக்கப்படும் பிரிவினர் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்துள்ளனர்.
பரேஷ் பருவா தலைமையிலான ULFA -I எனப்படும் பிரிவு சமாதான நடவடிக்கையில் இணையவில்லை.