ULLAS - நவ் பாரத் சாக்சார்தா கார்யக்ரம் (புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் - NILP) திட்டத்தின் கீழ் முழு பயன்நிலைக் கல்வியறிவு பெற்ற முதல் நிர்வாக அலகு ஆக லடாக் மாறியுள்ளது.
இந்த ஒன்றியப் பிரதேசம் ஆனது 97% கல்வியறிவு நிலையைத் தாண்டியுள்ளதை அடுத்து, அங்கு மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் ஒரு மாபெரும் வெற்றியை இது குறிக்கிறது.
இந்தத் திட்டம் ஆனது, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இளம் பருவத்தினருக்கு அடிப்படைக் கல்வியறிவு, எண்ணறிவு மற்றும் முக்கிய வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
NILP என்பது 2022-2027 ஆம் காலக் கட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய நிதியுதவி பெறும் திட்டமாகும்.