குடிமக்கள் அனைவரும் ஒற்றை தளத்தில் அனைத்து அரசு சேவைகளையும் அணுகிட வழிசெய்யும் வகையில் UMANG [UMANG – Unified Mobile Application for New-Age Governance] எனும் கைபேசி செயலியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
UMANG செயலியானது மத்திய அரசின் முக்கிய சேவைகளான ஆதார், டிஜிட்டல் லாக்கர் (Digi locker), விரைவு மதிப்பீட்டு அமைப்பு [RPA – Rapid Assessment System] மற்றும் பாரத் கட்டண செலுத்து அமைப்பு [BBPS – Bharat Bill Payment System] போன்றவையோடு ஒன்றிணைவைக் கொண்டது.
இந்த செயலியின் மூலம் குடிமக்களால் தொழிலாளர்கள் வைப்புநிதி நிறுவனத்தின் சேவைகளை அணுகிட இயலும். மேலும் நிரந்தர கணக்கு எண்ணிற்கு விண்ணப்பிக்க இயலும். மேலும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்ய இயலும்.
இந்த செயலியை மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகமானது (Meity) தேசிய மின்-ஆளுகை பிரிவுடன் (National e-Governance Division) உடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
UMANG செயலியானது தமிழ் உட்பட 13 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.