TNPSC Thervupettagam
November 24 , 2017 2586 days 1976 0
  • குடிமக்கள் அனைவரும் ஒற்றை தளத்தில் அனைத்து அரசு சேவைகளையும் அணுகிட வழிசெய்யும் வகையில்  UMANG [UMANG – Unified Mobile Application for New-Age Governance] எனும் கைபேசி செயலியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • UMANG செயலியானது மத்திய அரசின் முக்கிய சேவைகளான ஆதார், டிஜிட்டல் லாக்கர் (Digi locker), விரைவு மதிப்பீட்டு அமைப்பு [RPA – Rapid Assessment System] மற்றும் பாரத் கட்டண செலுத்து அமைப்பு [BBPS – Bharat Bill Payment System] போன்றவையோடு ஒன்றிணைவைக் கொண்டது.
  • இந்த செயலியின் மூலம் குடிமக்களால் தொழிலாளர்கள் வைப்புநிதி நிறுவனத்தின் சேவைகளை அணுகிட இயலும். மேலும் நிரந்தர கணக்கு எண்ணிற்கு விண்ணப்பிக்க இயலும். மேலும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்ய இயலும்.
  • இந்த செயலியை மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகமானது (Meity) தேசிய மின்-ஆளுகை பிரிவுடன் (National e-Governance Division) உடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
  • UMANG செயலியானது தமிழ் உட்பட 13 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்