TNPSC Thervupettagam

UMMEED வழிகாட்டுதல்கள்

October 13 , 2023 282 days 196 0
  • மாணவர்கள் மத்தியில் தற்கொலையைத் தடுப்பதற்காக பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் (MoE) ஆனது வெளியிட்டுள்ளது.
  • நல்வாழ்வு சேவைக் குழுக்களை அமைத்தல், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நெறிமுறை வகுப்புகள் மற்றும் மோசமான சூழ்நிலைகளில் உள்ள மாணவர்களுக்காக உடனடி நடவடிக்கை ஆகியவற்றிற்கான 'செயல் திட்டம்' இதில் அடங்கும்.
  • இந்த வழிகாட்டுதல் ஆனது UMMEED (புரிந்து கொள்ளுதல், ஊக்குவித்தல், நிர்வகித்தல், அனுதாபம், அதிகாரமளிப்பு, மேம்பாடு) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்கள் "உணர்திறன், புரிதல் மற்றும் சுய தீங்கு நடவடிக்கைகள் புகாரளிக்கப்பட்டால் பள்ளி நிர்வாகங்கள் அவர்களுக்கான ஆதரவை வழங்குதல் போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களாக" செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.
  • பள்ளி முதல்வர் தலைமையில், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாள்வதில் கவனம் செலுத்தும் வகையிலான ஒரு பள்ளி நல்வாழ்வு சேவைக் குழு (SWT) உருவாக்கப்படும்.
  • மோசமான சூழ்நிலைகளில் உள்ள மாணவர் யாரேனும் பங்குதாரரால் அடையாளம் காணப்பட்டால், அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தக் குழுவிற்கு அவர் புகாரளிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்