TNPSC Thervupettagam

UN சுற்றுச்சூழல் உச்சி மாநாடுகள் 2024

January 7 , 2025 8 days 112 0
  • நான்கு முக்கிய உச்சிமாநாடுகள் பயன்மிகு விளைவுகளை வழங்கத் தவறிவிட்டதால், பல முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் கடந்த ஆண்டு பல தடைகளை எதிர்கொண்டன.
  • இதில் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்து கொலம்பியாவிலும், பருவ காலநிலை குறித்து அஜர்பைஜானிலும், நிலத் தரமிழப்பு குறித்து சவுதி அரேபியாவிலும், நெகிழி குறித்து தென் கொரியாவிலும் நடைபெற்ற உச்சி மாநாடுகள் அடங்கும்.
  • கொலம்பியா பல்லுயிர்ப்பெருக்க வளங்காப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள், மிகவும் நிலையான நிலப் பயன்பாட்டு நடைமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்கான நிதியளிப்பு வழிமுறைகளை நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தவறியதால் தடுமாறின.
  • அஜர்பைஜானில், கடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சி மாநாட்டின் போது மேற்கொள்ளப் பட்ட முடிவான படிம எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கான உறுதிப்பாடுகளில் நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன.
  • சவூதி அரேபியாவில், தொழில்மயமான நாடுகள் சட்டப்பூர்வ வறட்சிநிலை குறித்த நெறிமுறையை நிறுவுவதில் ஆப்பிரிக்க நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டன.
  • தென் கொரியாவில் நெகிழி மாசுபாடு குறித்த பேச்சுவார்த்தைகள், நாடுகளிடையே குறிப்பிடத் தக்க பிளவை ஏற்படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்