TNPSC Thervupettagam

UN மனித உரிமைகள் சபை

July 19 , 2018 2321 days 672 0
  • UN (United Nations – UN) மனித உரிமைகள் சபைக்கு அமெரிக்காவிற்கு பதிலாக ஐஸ்லாந்தினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த தேர்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினை விட்டு விலகுவதாக அமெரிக்கா எடுத்த முடிவிற்குப் பிறகு நடந்தது.
  • மனித உரிமைகள் சபைக்கு ஐஸ்லாந்து முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கத்திய நாடுகளின் குழுவினால் ஐஸ்லாந்து பரிந்துரைக்கப்பட்டது.
  • 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபை உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்குகிறது.
  • ஐஸ்லாந்தின் பதவி வரையறைக் காலம் உடனடியாக தொடங்குகிறது. டிசம்பர் 31, 2019 வரை அது தனது பணியினை ஆற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்