இந்திய நாடானது அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவில் (UN-CEBD) இணைந்துள்ளது.
UN-CEBD ஆனது, பெருந்தரவுகளின் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து மேலும் ஆராய்வதற்காக 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக வேண்டி பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலைப் பயன்படுத்துவதில் உலகளாவியத் தரநிலைகள் மற்றும் முக்கிய நடைமுறைகளை வடிவமைப்பதில் இந்தியா பங்களிக்கும்.
UN-CEBD ஆனது சுமார் 31 உறுப்பினர் நாடுகளையும் 16 சர்வதேச அமைப்புகளையும் (இந்தியா உட்பட) கொண்டுள்ளது.