UN (United Nations – UN) மனித உரிமைகள் சபைக்கு அமெரிக்காவிற்கு பதிலாக ஐஸ்லாந்தினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த தேர்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினை விட்டு விலகுவதாக அமெரிக்கா எடுத்த முடிவிற்குப் பிறகு நடந்தது.
மனித உரிமைகள் சபைக்கு ஐஸ்லாந்து முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் குழுவினால் ஐஸ்லாந்து பரிந்துரைக்கப்பட்டது.
47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபை உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்குகிறது.
ஐஸ்லாந்தின் பதவி வரையறைக் காலம் உடனடியாக தொடங்குகிறது. டிசம்பர் 31, 2019 வரை அது தனது பணியினை ஆற்றும்.