TNPSC Thervupettagam

UNAIDS உலகளாவிய எய்ட்ஸ் பாதிப்பு குறித்த தகவல் புதுப்பிப்பு 2024

July 30 , 2024 117 days 178 0
  • இன்று வரை 42.3 மில்லியன் உயிர்களைப் பலி வாங்கியுள்ள எச்.ஐ.வி தொற்றானது ஒரு பெரிய உலகளாவியப் பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 39.9 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற நிலையில் அவர்களில் 65% பேர் உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் வாழ்கின்றனர்.
  • 2023 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொடர்பான காரணங்களால் 6,30,000 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 1.3 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 2025 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில் 95% பேர் நோய் கண்டறிதலுக்கான வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, அவர்களில் 95% பேர் உயிர் காக்கும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் சிகிச்சையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் 95% பேர் வைரஸ் எண்ணிக்கையினை குறைக்கும் சிகிச்சையினைப் பெற்றிருக்க வேண்டும்.
  • 2023 ஆம் ஆண்டில், இந்த சதவீதங்கள் முறையே 86%, 89% மற்றும் 93% ஆக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில், 86% பேர் தங்கள் நோய்ப் பாதிப்பு நிலை குறித்து அறிந்திருந்தனர், 77% பேர் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையைப் பெற்றனர் மற்றும் 72% பேர் வைரஸ் எண்ணிக்கையினைக் குறைக்கும் சிகிச்சையினைப் பெற்றுள்ளனர்.
  • 2023 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி. நோய்த் தொற்று கொண்ட 1.3 மில்லியன் மக்கள் 2010 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 39% குறைவாக உள்ளனர்.
  • இருப்பினும், 1.3 மில்லியன் புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் ஆனது 2025 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப் பட்ட 370,000 அல்லது குறைவான புதிய நோய்த்தொற்றுகள் என்ற இலக்கினை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • உலகளவில் எச்.ஐ.வி. எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான செலவினமானது, 9.5 பில்லியன் டாலர் குறைவாக உள்ளது என்பதோடு இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்