TNPSC Thervupettagam
August 1 , 2022 722 days 402 0
  • ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் எச்.ஐ.வி தொற்றின் அதிகரித்து வரும் போக்குடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் எச்.ஐ.வி தொற்றுகள் குறைந்துள்ளன.
  • 30 காசநோய்-எச்ஐவி பாதிப்புகள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் குறைந்துள்ள எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • எச்.ஐ.வி நோய்த் தொற்றுகளில் சில குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
  • இருப்பினும், 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காசநோய்த் தடுப்புச் சிகிச்சையை வழங்குவதில் இந்தியா 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் சிகிச்சை 30 சதவீதம் குறைந்துள்ளது.
  • உலகளவில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புதிய நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 3.6 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
  • இது 2016 ஆம் ஆண்டிலிருந்துப் பதிவான புதிய எச்ஐவி நோய்த் தொற்றுகளில் ஏற்பட்ட மிகச் சிறிய வருடாந்திர வீழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்