TNPSC Thervupettagam
December 4 , 2024 18 days 84 0
  • எய்ட்ஸ் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மனித உரிமைகளை நிலை நிறுத்துவது அவசியம் என்று குறிப்பிடும் அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
  • சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒரு பாகுபாடு மற்றும் LGBTQ+ நபர்களின் செயல்களைக் குற்றமாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளைத் தடுக்கின்றன.
  • உலகளவில் சுமார் 39.9 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கின்றனர்.
  • இவர்களில் சுமார் 9.3 மில்லியன் நபர்கள் தேவையான சிகிச்சையைப் பெற்றிருக்க இல்லை.
  • கடந்த ஆண்டு 630,000 பேர் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர்.
  • கூடுதலாக, உலகளவில் 1.3 மில்லியன் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளன.
  • குறைந்தது 28 நாடுகளில், புதிய தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்