UNAIDS உலகளாவிய எய்ட்ஸ் பாதிப்பு குறித்த தகவல் புதுப்பிப்பு 2024
July 30 , 2024 116 days 177 0
இன்று வரை 42.3 மில்லியன் உயிர்களைப் பலி வாங்கியுள்ள எச்.ஐ.வி தொற்றானது ஒரு பெரிய உலகளாவியப் பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் 39.9 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற நிலையில் அவர்களில் 65% பேர் உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் வாழ்கின்றனர்.
2023 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொடர்பான காரணங்களால் 6,30,000 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 1.3 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில் 95% பேர் நோய் கண்டறிதலுக்கான வாய்ப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, அவர்களில் 95% பேர் உயிர் காக்கும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் சிகிச்சையில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் 95% பேர் வைரஸ் எண்ணிக்கையினை குறைக்கும் சிகிச்சையினைப் பெற்றிருக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டில், இந்த சதவீதங்கள் முறையே 86%, 89% மற்றும் 93% ஆக இருந்தது.
2023 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி தொற்றுடன் வாழும் அனைத்து மக்களில், 86% பேர் தங்கள் நோய்ப் பாதிப்பு நிலை குறித்து அறிந்திருந்தனர், 77% பேர் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையைப் பெற்றனர் மற்றும் 72% பேர் வைரஸ் எண்ணிக்கையினைக் குறைக்கும் சிகிச்சையினைப் பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி. நோய்த் தொற்று கொண்ட 1.3 மில்லியன் மக்கள் 2010 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 39% குறைவாக உள்ளனர்.
இருப்பினும், 1.3 மில்லியன் புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் ஆனது 2025 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப் பட்ட 370,000 அல்லது குறைவான புதிய நோய்த்தொற்றுகள் என்ற இலக்கினை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
உலகளவில் எச்.ஐ.வி. எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான செலவினமானது, 9.5 பில்லியன் டாலர் குறைவாக உள்ளது என்பதோடு இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.