சவூதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில், பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடச் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் (UNCCD) 16வது பங்கு தாரர் மாநாடானது (CoP16) நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வின் கருத்துரு, “Our Land. Our Future” என்பதாகும்.
இந்த நிகழ்வின் போது, இந்தியாவானது IUCN அமைப்பின் காட்சி விளக்க அரங்கில் இலட்சியமிகு ஆரவல்லி பசுமை அரண் திட்டத்தினைக் காட்சிப்படுத்தியது.
வடமேற்கு இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் 1.15 மில்லியன் ஹெக்டேர் வளம் அழிந்த நிலப்பரப்பை மீட்டெடுப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட UNCCD ஆனது சட்டப்பூர்வப் பிணைப்பு கொண்ட ஒரே சர்வதேச ஒப்பந்தமாகும்.
UNCCD ஆனது உயிரியல் பன்முகத் தன்மை மீதான உடன்படிக்கை (CBD) மற்றும் UFCCC ஆகிய இரண்டு ரியோ உடன்படிக்கைகளுடன் இணைந்து செயல்படுகிறது.