சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற வறட்சியை எதிர்கொள்வதற்கான உடன்படிக்கை நிறைவுறாமல் பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைக்கான (UNCCD) 16வது பங்குதாரர்கள் (COP 16) உச்சி மாநாடு நிறைவடைந்தது.
மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க (MENA) பிராந்தியத்தில் UNCCD COP மாநாடு நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
உலகெங்கிலும், அதிலும் மிகவும் குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் பாலைவனமாக்கல், நிலங்களின் வளம் சீரழிப்பு மற்றும் வறட்சியை எதிர்கொள்ளச் செய்வதற்காக 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப் பட்டது.
இந்த மாநாட்டில் சர்வதேச வறட்சி நெகிழ்திறன் கண்காணிப்பு மையத்தின் ஒரு முன் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.
மிகவும் கடுமையான வறட்சியைச் சமாளிக்கும் ஒரு திறனை மதிப்பிடுவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் உலக நாடுகளுக்கு உதவும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தளம் இதுவாகும்.
ரியாத் உலகளாவிய வறட்சி நெகிழ்திறன் கூட்டாண்மையானது, உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 80 நாடுகளுக்கு வறட்சியைத் தாங்கும் திறன் கொண்ட பல்வேறு அம்சங்களை உருவாக்க உதவுவதற்காக 12.15 பில்லியன் டாலர் நிதியினை திரட்டி உள்ளது.
ஆப்பிரிக்கா தலைமையிலான மாபெரும் பசுமை தடுப்பு (GGW) முன்னெடுப்பு ஆனது, வளம் குன்றிய 100 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான நிலத்தை மீட்டெடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து நிதியினை திரட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிற பங்குதார நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஆனது, மிகவும் தகவமைக்கப்பட்டப் பயிர்கள் மற்றும் மண் வளத் திட்டங்களை (VACS) மிகவும் நன்கு மேம்படுத்துவதற்காக என்று சுமார் 70 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.
UNCCD ஆனது 1994 ஆம் அநாடு ஜூன் 17 ஆம் தேதியன்று பாரீஸ் நகரில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
இது பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியின் விளைவுகளை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரே சட்டப்பூர்வக் கட்டமைப்பாகும்.
196 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 197 பங்குதாரர் நாடுகள் இந்த உடன்படிக்கையின் சாரர்களாக உள்ளன.