TNPSC Thervupettagam

UNCCD –யின் ஆசிய பசுபிக் பிராந்திய பயிற்சி பட்டறை

May 2 , 2018 2402 days 748 0
  • பாலைவனமாகுதலைத் தடுப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கையின் (United Nations Convention to Combat Desertification- UNCCD) ஆசிய-பசுபிக் பிராந்திய பயிற்சி பட்டறை (Asia Pacific Regional Workshop) அண்மையில் புது தில்லியில் நடைபெற்றுள்ளது.
  • பாலைவனமாகுதலைத் தடுப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கை அமைப்பு மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change -MoEFCC) ஆகியவை ஒன்றாக கூட்டிணைந்து இப்பயிற்சிப் பட்டறையை நடத்தியுள்ளன.
  • நிலச் சீர்கேடு அடைதல் (land degradation) மீதான அறிக்கை மற்றும் கண்காணிப்பிற்கு ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் திறனை கட்டமைப்பதற்காக இந்த 4 நாள் மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டுள்ளது.

  • நிலச் சீர்கேடு அடைவினை தடுப்பதற்கான அரசு சாரா தொண்டு நிறுவனமான கன்சர்வேஷன் இண்டர்நேஷனல் (Conservation International) எனும் அமைப்பினால் கண்டுபிடிக்கப்பட்ட “Trends Earth” எனும் நடப்பு நிலை அறிவியல் தொழிற்நுட்ப கருவியின் பயன்பாடு பற்றி இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பாளர்களுக்கு பயற்சியளிக்கப்பட்டது.
  • பாலைவனமாகுதலைத் தடுப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கையின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட சரியான நேரத்தில், குறிப்பாக நிலச் சீர்கேடடைவு நடுநிலைமை (Land Degradation Neutrality - LDN) மீதான இலக்கு 3-ற்கான தங்களுடைய தேசிய அறிக்கையை சமர்ப்பிக்க இந்த பணியரங்கு ஓர் மேடையினை வழங்குகின்றது.

பாலைவனமாகுதலைத் தடுப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கை

  • பாலைவனமாகுதல் (desertification) மற்றும் பிற நிலச் சீர்கேடடைவுப் பிரச்சினைகளை களைவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரே சர்வதேச சட்ட பிணைப்புடைய உடன்படிக்கையே UNCCD ஆகும்.
  • இந்த உடன்படிக்கை 1994-ஆம் ஆண்டு ஐ.நா.வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது 1996-ல் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியா இந்த உடன்படிக்கையின் உறுப்பு நாடாகும்.
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகமானது இந்தியாவில் இம்மாநாட்டிற்கான முதன்மை அமைச்சகமாகும். மேலும் பிற இரு ரியோ உடன்படிக்கைகளுக்கும் இது முதன்மை அமைச்சகமாகும்.
  • அந்த இரு ரியோ உடன்படிக்கைகளாவன
    • பருவநிலை மாறுபாடு தடுப்பிற்கான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கை (United Nations Framework Convention to Combat Climate Change-UNFCC)
    • உயிரியல் பல்வகைத்தன்மை மீதான உடன்படிக்கை (Convention on Biological Diversity)
  • இந்த இரு உடன்படிக்கைகளும் 1992-ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோ டி-ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி மாநாட்டில் (Earth Summit) தோற்றுவிக்கப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்