2022 ஆம் ஆண்டு பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டில் (GII) மதிப்பிடப்பட்ட 193 நாடுகளில் 0.437 மதிப்பெண்களுடன் இந்தியா 108வது இடத்தைப் பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டு பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 191 நாடுகளில் இந்தியா 122வது இடத்தில் இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில், பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டில் இந்தியாவின் தர வரிசை தொடர்ந்து சிறப்பான நிலையில் உள்ளது.
2014 ஆம் ஆண்டில் 127 ஆக இருந்த இந்தத் தரவரிசையானது தற்போது 108 ஆக மாறி உள்ளது.
இருப்பினும், இந்தியா அதன் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் மிகப்பெரிய பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் பெண்களின் பங்கேற்பிற்கும் (28.3 சதவீதம்) ஆண்களின் பங்கேற்பிற்கும் (76.1 சதவீதம்) இடையிலான இடைவெளி 47.8 சதவீதமாக உள்ளது.