நைரோபியில் நடைபெற்ற ஐ.நாவின் சுற்றுச்சூழல் குழுமத்தின் (UN Environment Agency - UNEA) கூடுகையில் இந்தியாவானது 2030 ஆண்டளவில் நெகிழிப் பயன்பாட்டை நீக்கவும் நைட்ரஜன் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது.
மேலும் அதிகப்படியான நெகிழியின் உபயோகம் மற்றும் அவற்றை அகற்றுதல் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் குறித்தும் விளக்கப்பட்டது.
எதிர்வினையாக்க நைட்ரஜனின் காரணமாக மனித ஆரோக்கியம், சூழலியல் சேவைகள் ஆகியவற்றிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், காலநிலை மாற்றம் மற்றும் அடுக்கு மண்டல ஓசோன் சிதைவு ஆகியவற்றில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்தும் மேற்கோள் காட்டப்பட்டது.