TNPSC Thervupettagam

UNEP தொலைநோக்கு அறிக்கை 2024

July 23 , 2024 123 days 224 0
  • சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது, "Navigating New Horizons: A Global Foresight Report on Planetary Health and Human Wellbeing, 2024" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • நிலையான மேம்பாட்டு இலக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட 169 இலக்குகளில் 85% ஆனது அதனைப் பூர்த்தி செய்வதற்கான பாதையில் இல்லை மற்றும் 37% இலக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
  • மனித நடவடிக்கைகள் என்பவை 2050 ஆம் ஆண்டிற்குள் 90 சதவிகித அளவிற்கு நிலப் பரப்பினைப் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 46% இனங்கள் வரை அழிவைச் சந்திக்க நேரிடும்.
  • 2100 ஆம் ஆண்டில் உலக வெப்பநிலை 2.1-3.9 டிகிரி செல்சியஸ் உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • சுமார் 5.6 பில்லியன் பயனர்கள் கைபேசிச் சாதனங்களை வைத்திருப்பத்தோடு, 8.89 பில்லியனுக்கும் அதிகமான கைபேசி இணைப்புகள் உள்ளன.
  • உலக மக்கள் தொகையில் 1.5% பேர் வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்துள்ளனர் என்ற நிலையில் இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட சுமார் இரு மடங்காகும்.
  • சுற்றுச்சூழல் காரணமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது 2050 ஆம் ஆண்டில் 25 மில்லியன் முதல் 1 பில்லியனாக இருக்கக் கூடும்.
  • உலகின் முன்னணிப் பணக்காரர்களில் 10% பேர் 75% செல்வத்தை கொண்டுள்ளனர் மற்றும் கடைநிலையில் உள்ள 50% பேர் வெறும் 2% செல்வத்தினை மட்டுமே கொண்டு உள்ளதையடுத்து உலகச் சமத்துவமின்மை மிகவும் மோசமடைந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்