ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பிற்கான (UNEP – United Nations Environment Programme) நியூயார்க் அலுவலகத்தின் தலைவராகவும் துணைப் பொதுச் செயலாளராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதியை ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தோரஸ் நியமித்துள்ளார்.
இதற்கு முன் திரினிடாட் மற்றும் டோபாகோவைச் சேர்ந்த எலியாட் ஹாரிஸ் துணைப் பொதுச் செயலாளராக பணியாற்றினார். ஐ.நா.வின் மூத்த நிலையில் உள்ள பதவிகளுக்கு மூன்றாவது இந்தியராக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு முதல் திரிபாதி UNEP-ன் நீடித்த வளர்ச்சிக்கான செயற்பாடு நிரல்கள் 2030-ன் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.
இதற்குமுன் இவர் வளரும் நாடுகளில் காடுகளை அழித்தல் மற்றும் வனம் தரங்குறைதலிருந்து வெளியேறும் உமிழ்வுகளை குறைத்தலுக்கான ஐ.நா. அலுவலகத்தின் (REDD – Reducing Emission from Deforestation and Forest Degradation) நிர்வாகத் தலைவர் மற்றும் இயக்குநராகப் பணியாற்றினார்.
ஐ.நா.வில் மிக மூத்த இந்திய அதிகாரியாக அதுல் கரே செய்முறைசார் சேவைத் துறையின் தலைவராக (Under Secretary General) பதவி வகிக்கிறார்.