TNPSC Thervupettagam

UNEPயின் புதிய தலைவர்

June 18 , 2019 1859 days 647 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme-UNEP) புதிய நிர்வாக இயக்குநராக டென்மார்க்கைச் சேர்ந்த இங்கர் ஆண்டர்சன் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
  • இவர் அடுத்த 4 வருடங்களுக்கு இந்தப் பதவியை வகிப்பார்.
  • இவர் முன்னதாக இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் பொது இயக்குனராக 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019 ஆம் ஆண்டு மே வரை பணியாற்றினார்.
  • நைரோபியைத் தலைமையகமாகக் கொண்ட UNEP நிறுவனமானது உலகமெங்கிலும் 6 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
  • மேலும் ஐநாவின் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், சுற்றுச்சூழல் ரீதியிலான சிறந்தக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் வளரும் நாடுகளுக்கு உதவுதல் ஆகியவையும் இதன் மற்ற பணிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்