மும்பை மற்றும் மகாராஷ்ட்ராவில் உள்ள இரண்டுக் கட்டிடத் தொகுப்புகளான விக்டோரியா கோதிக் (Victoria Gothic) மற்றும் டெகோ கலை (Art Deco) எனும் கட்டிடக்கலை பாணிகள் ஆகிய இரண்டும் UNESCO-ன் உலக பாரம்பரியப் பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவானது பஃக்ரைனில் உள்ள மனாமாவில் நடைபெற்ற UNESCO உலக பாரம்பரியத்திற்கானக் குழுவின் 42வது அமர்வின் போது எடுக்கப்பட்டது.
அவுங்கராபாத்தில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் ஆகியவற்றுடன் சேர்த்து மகாராஷ்டிரா இந்தியாவிலேயே அதிக உலக பாரம்பரியத் தளங்களைக் கொண்டுள்ளது. மஹாராஷ்டிராவின் ஐந்து தளங்களில் மும்பை மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.
19-ம் நூற்றாண்டின் கோதிக் கட்டமைப்பு மற்றும் 20-ம் நூற்றாண்டின் டெகோ கலைசார்ந்த கட்டிடக்கலை ஆகிய இரண்டும் ஒன்றிணைந்த உலகின் முதல் பாரம்பரியத் தளமாக இந்த தளம் கூறப்படுகிறது.
மும்பையின் எலிபென்டா குகைகள் மற்றும் விக்டோரியா முனையம் (சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது) ஆகியவை 1987 மற்றும் 2004-களில் பிரபல முகவரியைப் பெற்றன. இதற்குப் பிறகு கிடைக்கும் மூன்றாவது கௌரவம் இதுவாகும்.
இதனுடன் டெல்லிக்கு நிகரான உலகப் பாரம்பரியத் தளங்களை மும்பை கொண்டுள்ளது. டெல்லியின் பாரம்பரியத் தளங்கள் செங்கோட்டை, குதூப்மினார் மற்றும் ஹுமாயுன் கல்லறை ஆகியனவாகும்.
இத்துடன் இந்தியாவில் உள்ள பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27 கலாச்சாரம் சார்ந்ததாகவும் 7 இயற்கை சார்ந்ததாகவும் மற்றும் ஒன்று இரண்டும் சேர்ந்த கலப்பாகவும் உள்ளன.
இவற்றின் சேர்ப்பானது உலக பாரம்பரியப் பட்டியலில் இந்தியாவை ஏழாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.