TNPSC Thervupettagam
March 27 , 2018 2436 days 840 0
  • UNESCO நிர்வாக மன்றத்தின் இந்தியாவிற்கானப் பிரதிநிதியாக முன்னாள் NCERT (National Council of Educational Research and Training) இயக்குநர் ரஜ்புத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.
  • 58 இடங்கள் கொண்ட UNESCO நிர்வாக மன்றத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். UNESCOவின் அரசியலமைப்பு அங்கமான நிர்வாக மன்றம், பொது மாநாட்டு அமர்வினால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  • இந்த மன்றம் பட்ஜெட் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்களின் வேலை ஆகியவற்றை ஆராய்கிறது. நடைமுறையில், இம்மன்றமே UNESCOவின் அனைத்துக் கொள்கைகள் (Policies) மற்றும் திட்டங்கள் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும்.

JS ராஜ்புத் பெற்ற சிறப்புகள்

  • 2014ஆம் ஆண்டு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • கல்வித்துறையில் இவரதுப் பங்களிப்பிற்காக மத்தியப் பிரதேச அரசால் இவருக்கு மகரிஷி வேத வியாசர் விருது வழங்கப்பட்டது.
  • ஜூன் 15, 2015 அன்று பிரதமரால் வெளியிடப்பட்ட ‘இந்தியாவில் இஸ்லாமியர்களின் கல்வி’ என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்