TNPSC Thervupettagam

UNESCOவின் பட்டியலில் கஞ்சன்ஜங்கா உயிர்க்கோள இருப்பு

August 10 , 2018 2300 days 963 0
  • உலகின் உயரமான உயிர்ச்சூழல் மையமான இந்தியாவின் கஞ்சன்ஜங்கா உயிர்க்கோள இருப்பு யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்புக்கான உலக பிணையத்திற்கான பட்டியலில் (World Network of Biosphere Reserve) இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்தோனேஷியாவின் பலேம்பாங்கில் 2018ம் ஆண்டு ஜூலை 23 முதல் 27 வரை நடைபெற்ற யுனெஸ்கோவின் 30வது மாநாட்டில் மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவானது கஞ்சன்ஜங்கா உயிர்க்கோள இருப்பை உயிர்க்கோள இருப்புகளுக்கான உலக பிணையத்திற்கான பட்டியலில் இணைத்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக இந்தியா 18 உயிர்க்கோள இருப்புகளை கொண்டுள்ளது. அதில் 11 சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு அப்பட்டியலில் இணைக்கப்பட்டவை.
  • மீதம் உள்ள 7 இருப்புகளும் உள்நாட்டளவில் உயிர்க்கோள இருப்புகளாக அங்கீகரிக்கப்பட்டவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்