TNPSC Thervupettagam

UNFAO – சீன நாட்டைச் சேர்ந்த தலைவர்

July 6 , 2019 1875 days 659 0
  • சீனாவின் துணை வேளாண் துறை அமைச்சரான குயு டோங்யூ என்பவர் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (Food and Agriculture Organization – FAO) பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த அமைப்பிற்குச் சீனாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது தலைவர் இவராவார். இதற்கு முன்பு இப்பதவியில் பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் கிராஸியனோ டா சில்வா என்பவர் இருந்தார்.
  • இவரது நான்கு ஆண்டுகாலப் பதவிக் காலம் ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கின்றது.
FAO
  • FAO என்பது பட்டினியை ஒழிப்பதற்காக சர்வதேச முயற்சிகளுக்கு தலைமையேற்கும் ஐக்கிய நாடுகளின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.
  • இத்தாலியின் ரோமைத் தலைமையிடமாகக் கொண்ட இது 1945 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • ஏறத்தாழ 11,500 பணியாளர்களுடன் செயல்படும் இந்த அமைப்பு ஐக்கிய நாடுகளின் ஒரு மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகும்.
  • FAO ஆனது வேளாண்மையை நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், வனங்கள், மீன்பிடித் தொழில்கள், சிறந்த ஊட்டச்சத்தை உறுதி செய்தல் மற்றும் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு போன்றவற்றில் வளரும் நாடுகளுக்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்