- இந்த ஆண்டின் காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) அல்லது ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்துவதற்கு சிலிக்குப் பதிலாக ஸ்பெயின் நாடு மாட்ரிட் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
- இந்த ஆண்டானது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்தின் 25வது மாநாடாகும்.
- கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடானது போலந்தின் கோட்டோவைஸில் நடத்தப் பட்டது.
- அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள சிலி அரசாங்கமானது நவம்பர் மாதத்தில் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பின் (Asia-Pacific Economic Cooperation - APEC) பொருளாதார உச்சி மாநாட்டை நடத்துவதையும் கை விட்டுள்ளது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:
-
- UNFCCC உறுப்பு நாடுகளின் 25வது மாநாடு.
- கியோட்டோ நெறிமுறைக்கான உறுப்பு நாடுகளின் 15வது கூட்டம் (Kyoto Protocol - CMP15).
- பாரிஸ் ஒப்பந்தத்திற்கான உறுப்பு நாடுகளின் இரண்டாவது கூட்டம் Paris Agreement (CMA2).