இது ஐக்கிய அரபு அமீரகத்தால் துபாயில் நடத்தப்பட்டது.
இது 2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு அல்லது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த கட்டமைப்பின் (UNFCCC) உறுப்பினர் நாடுகளின் மாநாடு ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுல்தான் அல் ஜாபர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார்
1992 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட முதல் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து இது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
"உறுப்பினர் நாடுகள்" என்பவை 1992 ஆம் ஆண்டில் அசல் ஐ.நா. காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் ஆகும்.
2015 ஆம் ஆண்டின் பாரீஸ் ஒப்பந்தமானது உலக சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைத்திருக்கவும், தொழில்துறை முன்னேற்றத்திற்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டாமல் கட்டுப்படுத்தவும் முயற்சிக்கிறது.
COP மாநாட்டின் 33வது பதிப்பை 2028 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்த இந்தியா முன்வந்துள்ளது.
கார்பன் மடுவை உருவாக்குவதற்கான வணிக ரீதியான முயற்சியான "கிரீன் கிரெடிட் முன்முயற்சியையும்" இது ஆதரித்தது.
COP28 ஆனது பொது சுகாதாரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை விவாதிக்கும் முதல் COP ஆகும்.