TNPSC Thervupettagam

UNFCCC COP 28 உச்சி மாநாடு

December 8 , 2023 356 days 573 0
  • இது ஐக்கிய அரபு அமீரகத்தால் துபாயில் நடத்தப்பட்டது.
  • இது 2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு அல்லது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த கட்டமைப்பின் (UNFCCC) உறுப்பினர் நாடுகளின் மாநாடு ஆகும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் சுல்தான் அல் ஜாபர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 1992 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட முதல் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து இது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
  • "உறுப்பினர் நாடுகள்" என்பவை 1992 ஆம் ஆண்டில் அசல் ஐ.நா. காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டின் பாரீஸ் ஒப்பந்தமானது உலக சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைத்திருக்கவும், தொழில்துறை முன்னேற்றத்திற்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டாமல் கட்டுப்படுத்தவும் முயற்சிக்கிறது.
  • COP மாநாட்டின் 33வது பதிப்பை 2028 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்த இந்தியா முன்வந்துள்ளது.
  • கார்பன் மடுவை உருவாக்குவதற்கான வணிக ரீதியான முயற்சியான "கிரீன் கிரெடிட் முன்முயற்சியையும்" இது ஆதரித்தது.
  • COP28 ஆனது பொது சுகாதாரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை விவாதிக்கும் முதல் COP ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்