TNPSC Thervupettagam
November 15 , 2024 13 days 127 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாடு (COP29) ஆனது அஜர்பைஜானின் பாகு நகரில் தொடங்கியது.
  • புவி மேலும் வெப்பமடைவதைத் தடுப்பதற்காகப் பகிரப்பட்ட திட்டத்தை உருவாக்க உலக நாடுகளை ஒன்றிணைப்பதே COP29 மாநாட்டின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.
  • இது பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சமாளிக்க வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பருவநிலை நிதியை அதிகரிப்பதின் மீது முக்கியக் கவனம் செலுத்தும்.
  • பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கை (UNFCCC) எனப்படும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் ஆனது 1992 ஆம் ஆண்டில் கையெழுத்து ஆனது.
  • 1997 ஆம் ஆண்டில் கியோட்டோ நகரில் (ஜப்பான்) நடைபெற்ற மூன்றாவது பங்குதாரர் மாநாட்டில் (COP3) பங்குதாரர் நாடுகள் கியோட்டோ நெறிமுறையை ஏற்று கொண்டன.
  • பாரீஸ் நகரில் நடைபெற்ற COP21 மாநாட்டில் 196 பங்குதாரர் நாடுகள் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரீஸ் உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டன என்ற வகையில் இது சட்டப் பூர்வமாக பிணைக்கப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 என்ற மாநாட்டின் போது கிளாஸ்கோ உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • துபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில், இழப்பு மற்றும் சேத நிதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்