UNFCCC (காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தம் - United Nations Framework Convention on Climate Change) என்பதின் பங்காளர்கள் மாநாட்டின் 26வது அமர்வானது (Conference of the Parties - COP 26) ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஸ்காட்லாந்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அலோக் சர்மா என்பவர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடைபெற இருக்கும் COP 26 காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.