வனங்களுக்கான ஐக்கிய நாடுகள் மன்ற கூட்டத்தின் 19வது பதிப்பு (UNFF 19) நியூயார்க்கில் நடைபெற்றது.
இதன் நோக்கமானது உலகளாவிய அளவில், வன இலக்குகளை அடைவதிலும் அதன் முன்னேற்றத்தை அதிகரித்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சியை நோக்கி செல்வதிலும் கவனம் செலுத்துவதாகும்.
UNFF என்பது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் (ECOSOC) கீழ் உள்ள ஒரு அமைப்பாகும்.
இது காடுகளின் மீதான சர்வதேச ஏற்பாட்டின் (IAF) இலக்குகளை ஆதரிப்பது மற்றும் காடு தொடர்பான பிற சர்வதேச ஒப்பந்தங்கள், செயல்முறைகள், அர்ப்பணிப்புகள் மற்றும் நோக்கங்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளவில், 2010 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கு இடையில், ஆண்டின் சராசரி நிகர வனப்பகுதி அதிகரிப்பில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.