ஈக்குவடார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்செஸ் ஐநா பொது அவையின் (United Nations General Assembly) 73-வது கூடுகையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெண் அமைச்சரான மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்செஸ் ஐநா பொது அவையின் தற்போதைய தலைவரான மிரேஸ்லாவ் லஜ்காக்கினைத் தொடர்ந்து இப்பதவியை வகிக்க உள்ளார்.
இவர் ஐநா பொது அவையின் தலைவர் பதவிக்கான போட்டியில் 128 வாக்குகளைப் பெற்றார். மேலும் இவருக்கு ஒரே ஒரு எதிர் போட்டியாளரான ஹோண்டுரோஸ் நாட்டின் ஐநாவிற்கான தூதரான மேரி எலிஸபெத் புளேரஸ் பிளேக் 62 வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் எஸ்பினோஸா கார்செஸ் ஐநா பொது அவைக்குத் தலைமைத் தாங்க உள்ள நான்காவது பெண் தலைவராக உருவாகியுள்ளார்.
ஐநா பொது அவையின் இதற்கு முந்தைய பெண் தலைவர்கள்
இந்தியாவின் விஜயலட்சுமி பண்டிட் – 1953
லைபீரியாவின் அன்கி எலிசபெத் புரூக்ஸ் – 1969
பஹ்ரைனின் ஷேக்ஹா ஹயா ராஷேத் அல் கலிபா - 2006
மேலும் ஐநா பொது அவைக்குத் தலைமை வகிக்க உள்ள லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த முதல் பெண் மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்செஸ் ஆவார்.