ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் அதன் வருடாந்திர நான்சென் விருதை 5 பேருக்கு வழங்க உள்ளது.
இந்த ஆண்டில் விருது பெற்றவர்கள்
ஜின் தாவோட் -இளம் சமூகத் தொழில்முனைவோர்.
சிஸ்டர் ரோசிட்டா மிலேசி (பிரேசில்) - கன்னியாஸ்திரி, வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர்.
மைமூனா பா (ஆப்பிரிக்கா) -புர்கினா பாசோவைச் சேர்ந்த ஆர்வலர்.
நடா ஃபடொல் (மத்தியக் கிழக்கு & வட ஆப்பிரிக்கா) - சூடான் நாட்டினைச் சேர்ந்த அகதி.
தீப்தி குருங் (ஆசிய-பசிபிக்) – நேபாள நாட்டின் குடியுரிமைச் சட்டங்களைச் சீர் திருத்துவதற்காக போராடியவர்.
நான்சென் விருது ஆனது நார்வே நாட்டினைச் சேர்ந்த புரவலர், விஞ்ஞானி, ஆய்வாளர் மற்றும் அரசுமுறை அதிகாரியான ஃபிரிட்ஜோஃப் நான்சனின் நினைவாக 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.