TNPSC Thervupettagam

UNHRC அமைப்பின் புதிய உறுப்பினர்கள்

October 19 , 2023 275 days 211 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, மனித உரிமைகள் சபையில் பணியாற்றச் செய்வதற்கு 15 புதிய நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இதில் பெரு மற்றும் ரஷ்யா ஆகியவை இடம் பெறவில்லை.
  • சீனா, கோட் டி ஐவரி, கியூபா, பிரான்சு மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இரண்டாவது முறையாக இச்சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • 47 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
  • அதன் உறுப்பினர் இடங்களானது உலக நாடுகளின் பிராந்திய குழுக்களிடையே கீழ்க் கண்டவாறு பகிரப் பட்டுள்ளது - ஆப்பிரிக்கா (13); ஆசியா-பசிபிக் (13); கிழக்கு ஐரோப்பா (6); லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (8); மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் பிற (7).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்