TNPSC Thervupettagam

UNHRC - அமெரிக்கா வெளியேற்றம்

June 23 , 2018 2251 days 662 0
  • ஐ.நா.வின் இஸ்ரேலுக்கு எதிரான போக்கை காரணம் காட்டி ஐ.நா.வின் மனித உரிமைகளின் உச்சி அமைப்பிலிருந்து (United Nations Human Rights Council - UNHRC) அமெரிக்கா வெளியேறியது.
  • பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் 2015 ஈரான் அணு ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அதன்பிறகு சமீபத்தில் மனித உரிமைகள் மன்றத்தில் இருந்தும் வாஷிங்டன் வெளியேறியது.
  • ஐ.நா.வின் அப்போதைய பொதுச் செயலாளர் கோபி அனான் மனித உரிமைகள் ஆணையத்தின் நம்பகத்தன்மை காரணமாக அவற்றைக் கலைத்தார். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு மனித உரிமைகள் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த அமைப்பு 47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது
  • இந்த உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.நா. பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்.
  • இந்த அமைப்பில் அமெரிக்கா 2009-ல் தான் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் போது இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்