ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, மனித உரிமைகள் சபையில் பணியாற்றச் செய்வதற்கு 15 புதிய நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதில் பெரு மற்றும் ரஷ்யா ஆகியவை இடம் பெறவில்லை.
சீனா, கோட் டி ஐவரி, கியூபா, பிரான்சு மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இரண்டாவது முறையாக இச்சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
47 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
அதன் உறுப்பினர் இடங்களானது உலக நாடுகளின் பிராந்திய குழுக்களிடையே கீழ்க் கண்டவாறு பகிரப் பட்டுள்ளது - ஆப்பிரிக்கா (13); ஆசியா-பசிபிக் (13); கிழக்கு ஐரோப்பா (6); லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (8); மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் பிற (7).