பெருநிறுவன விவகார செயலாளரான இஞ்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான திவால் சட்டக் குழுவானது பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்தக் குழுவானது UNCITRAL-யின் (United Nations Commission on International Trade Law) எல்லை கடந்த திவால் மாதிரி சட்டம் 1997-யை ஏற்றுக் கொள்ளும்படி பரிந்துரை செய்கிறது.
இந்த மாதிரி சட்டமானது உண்மையான திவால் சட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்வதை விட அதிகார வரம்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைத்தலுக்கு ஊக்கமளித்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்த UNCITRAL மாதிரி சட்டமானது 44 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
1966-ல் ஏற்படுத்தப்பட்ட UNICITRAL ஆனது ஐ.நா. பொதுச் சபையின் துணை நிறுவனமாகும்.