TNPSC Thervupettagam

UNICITRAL மாதிரி பரிந்துரை

October 24 , 2018 2226 days 668 0
  • பெருநிறுவன விவகார செயலாளரான இஞ்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான திவால் சட்டக் குழுவானது பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • இந்தக் குழுவானது UNCITRAL-யின் (United Nations Commission on International Trade Law) எல்லை கடந்த திவால் மாதிரி சட்டம் 1997-யை ஏற்றுக் கொள்ளும்படி பரிந்துரை செய்கிறது.
  • இந்த மாதிரி சட்டமானது உண்மையான திவால் சட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்வதை விட அதிகார வரம்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைத்தலுக்கு ஊக்கமளித்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த UNCITRAL மாதிரி சட்டமானது 44 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • 1966-ல் ஏற்படுத்தப்பட்ட UNICITRAL ஆனது ஐ.நா. பொதுச் சபையின் துணை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்