TNPSC Thervupettagam
November 26 , 2020 1378 days 690 0
  • இந்த அறிக்கையானது “தவறான தகவல்கள் எனும் வைரஸை நிறுத்துதல் : கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில், தீவிரவாதிகள், வன்முறைத் தீவிரவாதிகள் மற்றும் குற்றவியல் குழுக்களினால் பயன்படுத்தப்படும் சமூக ஊடகத்தின் தவறான பயன்பாடு” என்ற தலைப்பினைக்  கொண்டது.
  • இது ஐக்கிய நாடுகள் பிராந்தியங்களுக்கிடையேயான குற்றம் மற்றும் நீதி ஆராய்ச்சி மையத்தினால் (United Nations Interregional Crime and Justice Research Institute - UNICRI) வெளியிடப் பட்டுள்ளது.
  • இது குற்றவாளிகள் மற்றும் வன்முறைத் தீவிரவாதிகள் ஆகியோர் தங்களது உதவி அமைப்புகளைக் கட்டமைத்தல், அரசிற்கு எதிரான செயல்பாடுகளைத் தீவிரப் படுத்துதல் மற்றும் வைரஸை ஆயுதமாகப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த நோய்த் தொற்றுக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறி உள்ளது.
  • அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் ஆகியவற்றோடுத் தொடர்புடைய குழுக்கள் சதி தொடர்பான கோட்பாடுகளைப் பரப்புவதற்கு கோவிட் - 19 நோய்த் தொற்று காலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
  • உதாரணமாக, ஐஎஸ்ஐஎல் மற்றும் அல்கொய்தா ஆகியவை இந்த வைரஸ் மேற்கு நாடுகள் மீதான கடவுளின் கோபம் என்று கூறி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்