TNPSC Thervupettagam
March 16 , 2024 125 days 272 0
  • மத்திய அமைச்சரவையானது 2024 ஆம் ஆண்டு உத்தரப் பூர்வா பரிமாற்ற ரீதியிலான தொழில்மயமாக்கல் திட்டத்தினை (UNNATI - 2024) மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அமைக்கப் பட்டு உள்ளதோடு, எட்டு ஆண்டு கால உறுதிப்பாடுகளுடன் 2034 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் இது இயங்கும்.
  • இந்தத் திட்டம் ஆனது வடகிழக்குப் பிராந்தியத்தில் தொழில்துறைகளை மேம்படுத்தச் செய்வதையும், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது ஆகும்.
  • இது உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் மிகவும் ஆக்கப்பூர்வமிக்கப் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்க முயல்கிறது.
  • இதன்படி மாவட்டங்கள் இரண்டு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: மண்டலம் A (தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த மாவட்டங்கள்) மற்றும் மண்டலம் B (தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்கள்).
  • A மண்டலத்தின் செலவினத்தில் 60% ஆனது எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 40% ஆனது முதல் பதிவு (FIFO) அடிப்படையில் ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்