ஆப்பிரிக்க கூட்டளிப்பாளர்களுக்கான ஐ.நா.வின் அமைதிகாப்புப் பயிற்சியின் (United Nations Peacekeeping Course for African Partners-UNPCAP) மூன்றாவது பதிப்பு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவுடனான கூட்டிணைவோடு இணைந்து இந்தியாவில் உள்ள ஐ.நா. அமைதிகாப்பிற்கான மையத்தால் (Centre for United Nations Peacekeeping- CUNPK) இந்த பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
இப்பயிற்சியின் முதல் இரு பதிப்புகள் முறையே 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் புதுதில்லியில் நடைபெற்றது.
ஐ.நா.வின் அமைதிகாப்புப் படைக்கு (UN peacekeeping force) படையினை வழங்கி பங்களிக்கின்ற ஆப்பிரிக்காவின் படை பங்களிப்பு நாடுகளின் (African Troop Contributing Countries) திறனை கட்டமைப்பதும், மேம்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கங்களாகும்.
மேலும் இந்த ஆப்பிரிக்க நாடுகளினைச் சேர்ந்த அமைதிகாப்புப் படையின் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதும் இதன் நோக்கமாகும்.