TNPSC Thervupettagam

UNRWA நிதி இடைநிறுத்தம்

February 6 , 2024 293 days 292 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமைக்கு (UNRWA) நிதியுதவி வழங்குவதை அமெரிக்காவும் மற்ற எட்டு மேற்கத்திய நாடுகளும் இடை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளன.
  • காஸாவில் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் UNRWA நிதிச் சேவைகளை சார்ந்து இருக்கின்றனர்.
  • அமெரிக்கா மற்றும் இதர எட்டு மேற்கத்திய நாடுகள் ஆனது UNRWA முகமையின் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதிக்கும் மேலான தொகையை வழங்கி உள்ளன.
  • 1948 ஆம் ஆண்டு அரேபிய-இஸ்ரேல் போரின் போது, தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப் படும் தங்களது தாயகத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட 700,000 பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக 1949 ஆம் ஆண்டில் UNRWA நிறுவப் பட்டது.
  • UNRWA ஆனது அமெரிக்கா போன்ற நிதி வழங்கீடு நாடுகளின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலமாக முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வரையறுக்கப்பட்ட மானியத்தையும் பெறச் செய்வதோடு இது நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்